IRAVIN NIZHAL
www.garudabazaar.com

Big Breaking: ‘வாரிசு’ படத்தில் விஜய்-யுடன் இணைந்த SJ சூர்யா.? இது வேற லெவல் update.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்திருந்தனர். இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருந்தார்.

SJ Surya joined in Thalapathy Vijay Varisu movie

இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அவருடைய 66-வது திரைப்படமான தளபதி 66 திரைப்படத்துக்கு வாரிசு என்று பெயரிடப்பட்டது .இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பையும் குதூகலத்தையும் உண்டு பண்ணியது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தன்னா முதல் முறையாக கைகோர்க்கிறார்.

முன்னதாக பீஸ்ட் திரைப்படத்தில் விஜயுடன் இயக்குனர் செல்வராக இணைந்தது போலவே, இப்போது வாரிசு திரைப்படத்திலும் இன்னொரு இயக்குனர் விஜயுடன் இணைகிறார் என்று தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆம், வாரிசு திரைப்படத்தில் விஜயுடன் எஸ்.ஜே.சூர்யா இணையவிருக்கிறார் என்கிற தகவல்கள் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு பிரத்தியேகமாக கிடைத்திருக்கின்றன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், நடிகர் விஜய்தான் வாரிசு பட இயக்குனரிடம் எஸ்.ஜே.சூர்யாவை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்கும் முனைப்பை முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா நடிகர் விஜய் நடித்த குஷி திரைப்படத்தை இயக்கியவர் என்பதுடன், விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் வில்லனாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

SJ Surya joined in Thalapathy Vijay Varisu movie

People looking for online information on Sj suryah, Thalapathy 66, Vamsi Paidipally, Varisu, Vijay will find this news story useful.