IRAVIN NIZHAL
www.garudabazaar.com

BREAKING: அஜித் பட இயக்குனருடன் அடுத்த படத்தில் இணையும் அருண் விஜய்? ஆஹா.. ஷூட்டிங் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் 'யானை' படம் கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Arun Vijay AL Vijay New Movie London Shooting Update

Also Read | BREAKING:ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்'.. பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா? புது ரிலீஸ் தேதி என்ன?

ஹரி இயக்கிய யானை படம் சென்சார் போர்டால் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. யானை படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவது 1500+ திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யானை படத்தில் அருண் விஜய் 'ரவி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் 'ஜெபமலர்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Arun Vijay AL Vijay New Movie London Shooting Update

யானை படத்தில் நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் ஹரி.

இந்நிலையில் அருண் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் A.L விஜய் உடன் இணைய உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Arun Vijay AL Vijay New Movie London Shooting Update

ஏ.எல்.விஜய், நடிகர் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். பின் தலைவா படத்தை நடிகர் விஜய் நடிப்பிலும், தாண்டவம் படத்தை சியான் விக்ரம் நடிப்பிலும் இயக்கியவர். கடைசியாக கங்கனா ரனாவத்தை வைத்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தலைவி படத்தை இயக்கினார்.

Also Read | BREAKING: கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் இவரா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay AL Vijay New Movie London Shooting Update

People looking for online information on AL Vijay New Movie, AL Vijay New Movie London Shooting, Arun Vijay will find this news story useful.