திருக்கடையூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஜய்யின் தாய் ஷோபா & தந்தை SAC.. முழு தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் சந்திர சேகர் & ஷோபா சந்திர சேகர் குடும்பத்துடன் தருமபுரம் ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கடையூர் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Also Read | "டைரக்டரா முதல் படத்துலயே.." - 'ராக்கெட்ரி' மாதவனை பாராட்டி ரஜினி பரபரப்பு கடிதம்..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அமைந்துள்ள திருக்கடையூர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பன்னிரு திருமுறைகளில் தேவாரம் பாடல் பெற்ற காவிரிக்கரை தலங்களில் மிக முக்கிய தலம் திருக்கடையூர். அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் இணைந்த கோயில் அழைக்கப்படுகிறது. அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் பெயர்பெற்ற கோயிலும் இது தான்.
மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு என வரம் அளித்த திருக்கோயிலும் இதுதான். திருஞானசம்பந்தப் பெருமான், திருநாவுக்கரசர் பெருமான், சுந்தர மூர்த்தி நாயனார், திருமூலர், சேரமான் பெருமான் நாயனார், சேக்கிழார் பெருமான், பரணதேவ நாயனார், நக்கீர தேவ நாயனார் ஆகியோர் பாடிய திருத்தலம இது.
இந்த கோயிலில் 60, 70, 80, 90, 100 வயதை பூர்த்தி செய்தவர்கள் பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூரணாபிசேகம் மற்றும் அதில் ஆயுள் ஹோமங்கள் செய்து சிவனையும் அம்மையாரையும் தரிசிக்க நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு மிக்க திருக்கடையூர் கோயிலில் S.A சந்திர சேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா சந்திர சேகர் ஆகிய இருவரும் கோயிலில் இன்று சதாபிஷேகம் & ஆயுஷ் ஹோமம் செய்த பின் காலசம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன
Also Read | துல்கர் சல்மான் - மிருணாள் தாகூர் நடிக்கும் "சீதா ராமம்".. வெளியான அடுத்த சிங்கிள் டூயட் பாடல்!