'பூ' படத்தில் அறிமுகமாகி 'சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள்,' ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாள நடிகையான பார்வதி நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த படம் 'உயரே'.

அந்தப் படத்தில் ஆசீட் வீச்சால் முகம் பாதிக்கப்பட்ட பெண்ணாக பார்வதி நடித்துள்ளார். பைலட் ஆக ஆசைப்படும் பார்வதியின் முகத்தில் அவருடைய காதலனே ஆசீட் வீச, அதனால் ஏற்படும் பாதிப்புகளை பார்வதி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் 'உயரே' படத்தின் கதை.
இந்தப் படத்தை சமந்தா இப்போது தான் பார்த்திருப்பார் போலிருக்கிறது. படத்தை பாருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். “உயரே' படத்தைப் பாருங்கள். அது உங்களை கோபப்படுத்தும், அழ வைக்கும், யோசிக்க வைக்கும், காதலிக்க வைக்கும், உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும், ஊக்கம் கொடுக்கும். நன்றி பார்வதி, நீங்கள் எங்களின் பெருமை. இயக்குனர் மனு அசோகன், எழுதிய பாபி சஞ்சய் ஆகியோருக்கு வாழ்த்துகள். முற்றிலும் புத்திசாலித்தனமானது,” என வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். சமந்தாவின் பாராட்டுக்கு பார்வதி நன்றி தெரிவித்துள்ளார்.
#Uyare .. just watch it 🙏🙏 .. It will make you angry , make you cry , make you think , make you love ,make you have hope and leave you inspired . Thankyou @parvatweets ...you are our pride ❤️ And the team director #Manu and writers #BobbySanjay . Absolutely brilliant 🙌 pic.twitter.com/U36oJpx6Bh
— Baby Akkineni (@Samanthaprabhu2) June 2, 2019