‘அறம்’ இயக்குநருடன் இணையும் பாபி சிம்ஹா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘அறம்’ திரைப்படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்கவிருக்கிறார்.

Bobby Simha, has signed a film with Aramm director Gopi Nainar

ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கும் இப்படம் குறித்த ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது வடசென்னை பின்னணியில், கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை கோபி நயினார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பயோபிக் படத்தில் நடித்து வருகிறார்.