“இதே சத்யம் தியேட்டர்ல நம்ம பேனரும்...!” - சும்மா தெறிக்கவிடும் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படம் வரும் டிச.20ம் தேதி ரிலீசாகிறது.

Sivakarthikeyan's grand banners of Hero along with Salman Khan's Dabangg 2 in Sathyam Cinemas

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்தின் ‘மால்டோ கிட்டபுலே’,‘ஹீரோ’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீசையொட்டி புரொமோஷன் பணிகளை வித்தியாசமான முறையில் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பங்காக, சத்யம் தியேட்டரின் Front பேனரில் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் போஸ்டரும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் வெளியிடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கும் ‘தபங் 3’ திரைப்படத்தின் போஸ்டரும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.

“இதே சத்யம் தியேட்டரில் நம்ம பேனரும் வரணும், சும்மா தெறிக்கவிடுறோம்” என ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ திரைப்படத்தில் பேசிய வசனத்தை நினைவுக் கூர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்வீட் செய்து வருகின்றனர்.