சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'க்கு மியூசிக் நம்ம அனிருத், அப்போ மத்தவங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படம் வரும் டிச.20ம் தேதி ரிலீசாகிறது.

Sivakarthikeyan's Doctor Movie Directed by Nelson Dilipkumar Full Crew List

'இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். ‘டாக்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் என்றும், படத்தொகுப்பாளர் நிர்மல் என்றும், கலை இயக்குனர் கிரண் என்றும், சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவ் என்றும், காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.