சூப்பர் ஹிட் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்..! - டைட்டில் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படம் வரும் டிச.20ம் தேதி ரிலீசாகிறது.

Sivakarthikeyan and KJR Studios to be collaborated for Doctor directed by Nelson Dilipkumar

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். ‘டாக்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பணிகள் வரும் டிச.6ம் தேதி முதல் தொடங்கும் என் அறிவிப்பு வெளியாகியுள்ளது.