மீண்டும் 'ஹீரோ' பட நிறுவனத்துடன் இணையும் சிவகார்த்திகேயன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 01, 2019 09:48 PM
'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது 'ஹீரோ' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தை 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜூன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமான எஸ்கே புரொடக்ஷனுடன் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஒரு படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை (டிசம்பர் 2) மாலை 5 மணிக்கு வெளியாகும் என கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் படமா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
Project details will be revealed tomorrow at 5 PM🔥@SKProdOffl @Siva_Kartikeyan pic.twitter.com/sjAqOecuLv
— KJR Studios (@kjr_studios) December 1, 2019