Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

ரிலீசான PRINCE படத்தின் 2வது சிங்கிள்.. சிவகார்த்திகேயனின் ஜாலியான கலர்ஃபுல் டான்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Prince Movie Second Single Jessica Released

Also Read | TRENDING: மாலத்தீவு கடற்கரையில் இன்பச்சுற்றுலா.. வைரல் ஆகும் நடிகை அமலாபால் போட்டோஸ்

"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

SivaKarthikeyan Prince Movie Second Single Jessica Released

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். 

SivaKarthikeyan Prince Movie Second Single Jessica Released

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ஜெஸ்ஸிகா  இன்று வெளியாகி உள்ளது. தமன் குரலில் இந்த பாடல் அமைந்துள்ளது. அறிவு இந்த பாடலை எழுதியுள்ளார்.

SivaKarthikeyan Prince Movie Second Single Jessica Released

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.  இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

SivaKarthikeyan Prince Movie Second Single Jessica Released

'பிரின்ஸ்' படம் வரும் தீபாவளிக்கு  ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் 'வலிமை' படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.  இந்த பிரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Also Read | பிரபல வெளிநாட்டு போட்டோகிராபருடன் நடிகை மீரா ஜாஸ்மின் போட்டோஷூட்..

ரிலீசான PRINCE படத்தின் 2வது சிங்கிள்.. சிவகார்த்திகேயனின் ஜாலியான கலர்ஃபுல் டான்ஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince Movie Second Single Jessica Released

People looking for online information on Prince Movie, Prince Movie Second Single, Prince Movie Updates, Sivakarthikeyan will find this news story useful.