www.garudabazaar.com

என்ன மனுஷன் சார்!.. சிவகார்த்திகேயனின் ஒரு வார்த்தையில்.. பிரேம்ஜி ஹேப்பி அண்ணாச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

V ஹவுஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் மாநாடு.

Sivakarthikeyan premji comical tweets went viral on social media

சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,  மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார்.

Sivakarthikeyan premji comical tweets went viral on social media

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.Time Loop பாணியில் அமைந்துள்ள இந்த படம்  (25.11.2021) அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Sivakarthikeyan premji comical tweets went viral on social media

ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாநாடு படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில்,  #மாநாடு படத்தினை முழுவதுமாக கைதட்டி ரசித்தேன், இந்த ரேசி என்டர்டெய்னரை சிறப்பாக முழு குழுவும் தங்களால் முடிந்ததை வழங்கியுள்ளன. வெங்கட்பிரபு சார், உங்கள் நேர்த்தியான செயல்பாட்டால் சொல்லி அடித்துள்ளீர்கள்! சிலம்பரசன் சார், தம்ப்ஸ் அப், SJ சூர்யா, சார்  நீங்க தெரிச்சிட்டீங்க! யுவன் சங்கர் ராஜா, சார் பிஜிஎம் ஃபுல்ஃபயர்! எடிட்டர் பிரவீன், செம ஒர்க் சார்! இந்த வெற்றி தமிழ் சினிமாவில் தொடரட்டும் என  குறிப்பிட்டுள்ளார்.

Sivakarthikeyan premji comical tweets went viral on social media

மேலும் நடிகர் பிரேம்ஜியை குறிப்பிட்டு இந்த டிவீட்டில் உங்களை நான் மென்சன் செய்துள்ளேன் என கூறியுள்ளார். இதற்கு முன் மாநாடு படத்திற்கு வாழ்த்து சொல்லும் போது பிரேம்ஜியை குறிப்பிடாமல் சிவகார்த்திகேயன் மறந்துவிட்டார். இதை குறிப்பிட்டு பிரேம்ஜி சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சிவகார்த்திகேயன், பிரேம்ஜியும் வெங்கட்பிரபுவும் ஒரே ஆள் என நினைத்து இருந்தேன் என குறிப்பிட்ட டிவீட் வைரலனாது குறிப்பிடத்தக்கது. 

Sivakarthikeyan premji comical tweets went viral on social media

People looking for online information on Maanaadu, Premji, Sivakarthikeyan will find this news story useful.