Jango Others
www.garudabazaar.com

சென்சார் ஆன சிம்புவின் மாநாடு திரைப்படம்! எத்தனை மணி நேரம் ஓடும்? வெளியான அசத்தல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

Simbhu Maanaadu censored wth U/A CBFC certificate

இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். 

Simbhu Maanaadu censored wth U/A CBFC certificate

இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  நேற்று இந்த படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகிவுள்ளது.  வெளியானதில் இருந்து டிரெண்டிங்காகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

Simbhu Maanaadu censored wth U/A CBFC certificate

இந்நிலையில் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழாக U/A கிடைத்துள்ளது. இந்த படம்  147 நிமிடங்கள் [2hr 27 mins] ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை படக்குழு சார்பாக PRO ஜான் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Simbhu Maanaadu censored wth U/A CBFC certificate

People looking for online information on Maanaadu, Str, Venkat Prabhu will find this news story useful.