www.garudabazaar.com

BOX OFFICE: சிம்பு நடித்த மாநாடு படத்தின் முதல் இரண்டு நாள் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் வியாழன் அன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது.

silambarasan tr maanaadu movie box office collection

இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கியுள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார்.சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர்.

silambarasan tr maanaadu movie box office collection

இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,  மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

silambarasan tr maanaadu movie box office collection

வியாழக்கிழமை வெளியான இந்த படம் முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். 

silambarasan tr maanaadu movie box office collection

silambarasan tr maanaadu movie box office collection

People looking for online information on Maanaadu, Silambarasan TR will find this news story useful.