www.garudabazaar.com

வாரே வா.. சிம்புவின் மாநாடு படத்தை கைப்பற்றிய டிவி சேனல் மற்றும் ஓடிடி தளம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம்  நவம்பர் 25-ஆம் தேதி வெளியானது.

Silambarasan TR Maanaadu digital and OTT rights information

சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலான இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருந்தார். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்களும் டிரைலரும் ஏற்கனவே வெளியான நிலையில், பட வெளியீட்டுக்கு ஒருநாள் முன்னதாக, திரைப்பட வெளியீடு தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் சோகமாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அடுத்த சில மணி நேரங்களுக்குள், நவம்பர் 24-ஆம் தேதி இரவோடு இரவாக பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு, சுமூக உடன்படிக்கை ஏற்பட்டது. அடுத்த நாள் காலையிலும் 5 மணி ஷோ கேன்சலாகியது. ஆனால் காலை 7 மணிக்கு மேல் மாநாடு ரிலீஸ் ஆனது.

இப்படி பல தடைகளைக் கடந்து வெளியான மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை கலைஞர் டிவி சேனல் உட்பட சில டிவி சேனல்கள் கைப்பற்றியதாக பேச்சுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவியும், ஓடிடி உரிமத்தை சோனி லைவ் சேனலும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுளள்ன. 

Silambarasan TR Maanaadu digital and OTT rights information

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Sj suryah, Suresh Kamatchi, Venkat Prabhu will find this news story useful.