www.garudabazaar.com

"மாநாடு" பார்த்துட்டு சிவகார்த்திகேயன் செய்த டிவிட்டர் விமர்சனம்! வைரலாகும் தெறி டிவீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு. இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கியுள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார்.

sivakarthikeyan appreciates Maanaadu movie cast & crew

இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,  மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

sivakarthikeyan appreciates Maanaadu movie cast & crew

Time Loop பாணியில் அமைந்துள்ள இந்த படம் (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை பாராட்டியிருந்தார். ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாநாடு படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

sivakarthikeyan appreciates Maanaadu movie cast & crew

இதுகுறித்து அவர் டிவிட்டரில்,  #மாநாடு படத்தினை முழுவதுமாக கைதட்டி ரசித்தேன், இந்த ரேசி என்டர்டெய்னரை சிறப்பாக முழு குழுவும் தங்களால் முடிந்ததை வழங்கியுள்ளன. வெங்கட்பிரபு சார், உங்கள் நேர்த்தியான செயல்பாட்டால் சொல்லி அடித்துள்ளீர்கள்! சிலம்பரசன் சார், தம்ப்ஸ் அப், SJ சூர்யா, சார்  நீங்க தெரிச்சிட்டீங்க! யுவன் சங்கர் ராஜா, சார் பிஜிஎம் ஃபுல்ஃபயர்! எடிட்டர் பிரவீன், செம ஒர்க் சார்! இந்த வெற்றி தமிழ் சினிமாவில் தொடரட்டும் என  குறிப்பிட்டுள்ளார்.

sivakarthikeyan appreciates Maanaadu movie cast & crew

 

sivakarthikeyan appreciates Maanaadu movie cast & crew

People looking for online information on Maanaadu, Sivakarthikeyan, Str will find this news story useful.