‘குடும்பம்னாலே எல்லாமே சரி சமம் தான்..’- சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ Run Time!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 25, 2019 12:52 PM
சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனை இயக்கினார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

கிராமிய பின்னணியில், அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ச்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது படு பயங்கரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் Runtime குறித்த தகவல் வெளியகியுள்ளது அதன்படி இப்படத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 16 நிமிடங்கள் என்றும் இரண்டாம் பாதியும் அதே 1 மணி நேரம் 16 நிமிடங்கள் என்பதுதான்.