இனி தலைவரின் தர்பார் ஆரம்பம்.. சும்மா Kizhichifying..! - அனிருத்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 28, 2019 10:34 AM
‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவித்தது. இதைத் தொடர்ந்து ‘தர்பார்’ சரவெடி இசையில் இருந்து முதல் சிங்கிள் டிராக்கான ‘சும்மா கிழி’ பாடல் நேற்று (நவ.28) ரிலீசானது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இப்பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்நிலையில், இப்பாடல் ரிலீசான 48 மணிநேரத்தில் சுமார் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது குறித்து இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது அன்பு சாம்ராஜ்ஜியம்.. இனி தலைவரின் தர்பார் ஆரம்பம்.. மிக்க நன்றி சும்மா கிழி chifying’ என ட்வீட் செய்துள்ளார்.
Idhu Anbu saamraajyam🤘🏻Ini Thalaivarin @rajinikanth #Darbar aarambam ⭐ Mikka nandri for #ChummaKizhi chifying the views :) https://t.co/hur7ch2oFW
6 Million & counting 🥳@ARMurugadoss #SPB sir @Lyricist_Vivek @santoshsivan #Nayanthara @LycaProductions pic.twitter.com/wdYiKCOqRP
— Anirudh Ravichander (@anirudhofficial) November 28, 2019