சிவகார்த்திகயேனின் 'ஹீரோ' பட இயக்குநரிடம் நடிகை கல்யாணி வேண்டுகோள்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 24, 2019 09:05 PM
'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் 'ஹீரோ' படத்தில் நடித்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜூன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், இவானா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றுள்ளது எனவும் படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து இந்த படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன், 'நான் பெருமைப்படும் ஒன்றை செய்ய அனுமதித்ததற்காக இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த என்னுடைய விருப்பமான குழுவின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. என்னால் அங்கு இருக்க முடியவில்லை. என்னை ஃபோட்டோஷாப் செய்து ஃபைனல் டீம் ஃபோட்டோவில் சேர்க்க முடியுமா?' என்று இயக்குநர் பி.எஸ்.மித்ரனிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.