ஜெயம் ரவி நடிக்கும் 'கோமாளி'யின் அடுத்த லுக் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'அடங்க மறு' கடந்த டிசம்பர்  21 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி 'கோமாளி' எனும் படத்தில் நடித்துவருகிறார்.

Jayam Ravi and Kajal Aggarwal's Comali 6th Look is Out

இந்த படத்தில் காஜல் அகர்வால் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.  இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் ஜெயம் ரவியின் ஒவ்வொரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த போஸ்டர்களில் விதவிதமான கெட்டப்புகளில் ஜெயம் ரவி காட்சியளிக்கிறார்.

அந்த வகையில் கோமாளி படத்தின் 6வது லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். இதுவரை வெளியான போஸ்டர்களில் வித்தியாசமாக கெட் அப்புகளில காட்சியளித்த அவர் இந்த போஸ்டரில் சாதரணமாக முறைத்தபடி காட்சியளிக்கிறார்.