சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன் சார்பாக தயாரித்திருக்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் டிவி பிரபல ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஷிரின் காஞ்வாலா, ஆர்ஜே விக்னேஷ்காந்த், ராதாரவி, நாஞ்சில் சம்பத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷபிர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. இந்த படம் நாளை (13-06-2019) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஸ்நீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
''அவனுக்கு பிரெய்ன் டியூமர்'' - 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' புரோமோ இதோ வீடியோ