இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாப் பாடகராக அறிமுகாகியுள்ள வீடியோ புரொமோ வெளியாகியுள்ளது.

அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த வீடியோவிற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த மியூசிக் வீடியோவில் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் நடித்துள்ளார். வித்தியாசமான ஸ்டைலிஷ் லுக்கில் அமீன் நடித்துள்ள இந்த பாடல் புரொமோ சோனி மியூசிக் சவுத் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்பாடலை ஏ.ஆர்.அமீன் பாடியுள்ளார். விவேக் மற்றும் ஏடிகே பாடல் எழுதியுள்ளனர். சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அமீனின் ஸ்டைலிஷ் லுக்கை பகிர்ந்து இது யார் என்று கண்டுபிடியுங்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். அந்த புகைப்படம் இந்த ‘சகோ’ பாடல் மியூசிக் வீடியோவில் எடுக்கப்பட்டது என்பது தெரியந்துள்ளது.
அதேபோல், ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன், தனது சின்ன வயதில் சங்கீதம் கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்றை ‘காத்திருங்கள்’ என்ற கேப்ஷனுடன் சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், தந்தை ரகுமானிடம் வீடியோ கான்ஃபெரன்ஸிங்கில் அமீன் பாடிக் காண்பிப்பார். இவை அனைத்தும் ‘சகோ’ பாடலின் வீடியோ புரொமோவுக்கான குறியீடு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பாப் சிங்கராக அறிமுகமாகும் ஏ.ஆர்.அமீன் - ராக்கிங் வீடியோ இதோ வீடியோ