The Legend
Maha others
www.garudabazaar.com

கமல் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின்.

Kamal Haasan Producing New Movie with Udhayanidhi Stalin

Also Read | Life of பழம்: புது போஸ்டருடன் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் 3-வது சிங்கிள் அப்டேட்!

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் சினிமாவில் நடித்து வருகிறார்.

கடைசியாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற ஆர்ட்டிகள்15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

Kamal Haasan Producing New Movie with Udhayanidhi Stalin

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில்  கலகத் தலைவன்  திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்  நிறுவனம்  பல படங்களை தயாரித்தும், வினியோகம் செய்தும் வருகிறது.

குருவி, ஆதவன், ஏழாம் அறிவு, நீர்ப்பறவை போன்ற படங்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படங்களாகும்.

Kamal Haasan Producing New Movie with Udhayanidhi Stalin

குறிப்பாக அண்மைக்கால படங்களான ஆர்.ஆர்.ஆர், டான், விக்ரம், ராக்கெட்ரி, FIR, காத்துவாக்குல ரெண்டு காதல், அடுத்து ரிலீஸ் ஆகவுள்ள சந்தானத்தின் குலு குலு போன்ற படங்கள் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டவை.

இப்படி பல தொடர் திரைப்பயணங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்துவிட்டது. இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் 15 ஆண்டுகால திரைப்பயணத்தை ஒட்டி, சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Kamal Haasan Producing New Movie with Udhayanidhi Stalin

இந்நிகழ்வில் இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் ஆமிர்கான், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்கமல் நிறுவனத்தின் 54வது படமாக இந்த படம் உருவாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | உதயநிதி - நித்தி அகர்வால் நடிக்கும் புதிய படம்.. டைட்டிலுடன் வெளியான நேர்த்தியான FIRST LOOK!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Producing New Movie with Udhayanidhi Stalin

People looking for online information on Kamal Haasan, Kamal Haasan Producing New Movie, Udhayanidhi Stalin will find this news story useful.