www.garudabazaar.com

சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஜய் ரசிகர்கள்.. வாரிசு பட போஸ்டருடன் வைரலாகும் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Varisu Vijay Fans at Sabarimala Temple

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. வினியோகஸ்தர்கள் அறிவித்த படத்தின் ரிலீஸ் தேதி! செம்ம

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

Varisu Vijay Fans at Sabarimala Temple

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Varisu Vijay Fans at Sabarimala Temple

வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.

Varisu Vijay Fans at Sabarimala Temple

இந்நிலையில் வாரிசு படம் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி பட போஸ்டர் அடங்கிய பேனரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிடித்தபடி நிற்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.  பன்ருட்டி நகர மாணவரணி விஜய் மக்கள் இயக்கம்  என பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | ரஞ்சிதமே பாட்டுக்கு டான்ஸ் ஆடிய இவானா 😍.. கூட நம்ம ஆளு வேற வெளுத்து வாங்குறாரு🔥

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Vijay Fans at Sabarimala Temple

People looking for online information on Sabarimala Temple, Varisu, Varisu Vijay Fans, Vijay will find this news story useful.