www.garudabazaar.com
iTechUS

கேங்ஸ்டர்களுக்கு எல்லாம் தலைவரா?.. LEO-னா என்ன? Bloody Sweet பாடகர் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் லியோ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Singer Sidharth Basrur Exclusive about Vijay Leo Title

Images are subject to © copyright to their respective owners.

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Singer Sidharth Basrur Exclusive about Vijay Leo Title

இந்நிலையில் ப்ரோமோ வீடியோவில் வரும் லியோ லியோ பாடலை பாடிய பிரபல பாடகர் சித்தார்த் பஸ்ரூர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "லியோ என்ற பெயருக்கு நீங்கள் நினைக்கும் அர்த்தம் ராசியா?, சிங்கமா?, கேங்ஸ்டர் கூட்ட தலைவரா?" என்ற கேள்விக்கு சித்தார்த் பஸ்ரூர், "என்னைப் பொறுத்தவரை நான் என்ன நினைக்கிறேன் என்றால் லியோ என்பது சிங்கத்தை குறிக்கலாம்" என பதில் அளித்துள்ளார்.

கேங்ஸ்டர்களுக்கு எல்லாம் தலைவரா?.. LEO-னா என்ன? BLOODY SWEET பாடகர் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Singer Sidharth Basrur Exclusive about Vijay Leo Title

People looking for online information on LCU, Leo, Lokesh Kanagaraj, Sidarth Basrur, Vijay will find this news story useful.