RRR Others USA
www.garudabazaar.com

சிம்புவின் VTK படத்தில் பேமிலி மேன் நடிகர்… செம்ம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Simbu VTK movie actor neerav madhav latest poster viral

பீஸ்ட் வெறித்தனம் overloaded… வெளியானது 5 மொழிகளின் போஸ்டர்!

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி மூன்றாவதாக ஒரு படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. முதலில் அந்த படத்துக்கு ’நதிகளில் நீராடும் சூரியன்’ என்று தலைப்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அதற்கு பதிலாக  ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்ட புதிய படத்தை தொடங்கினர். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

Simbu VTK movie actor neerav madhav latest poster viral

வெந்து தணிந்தது காடு படத்தின் கலைஞர்கள்…

இந்த படத்துக்கு கௌதம் மேனனின் படங்களில் வழக்கமாக பாடல்கள் எழுதும் கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதன் பின்னர் மும்பையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இந்த படத்தில் நடிகை ராதிகா சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.

Simbu VTK movie actor neerav madhav latest poster viral

சிம்புவின் ஜோடி

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிப்பதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. சிம்பு பிறந்தநாளுக்கு இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

Simbu VTK movie actor neerav madhav latest poster viral

VTK வில் பேமிலி மேன் நடிகர்….

இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும் நிலையில் இப்போது படக்குழுவினர் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் பேமிலி மேன் சீரிஸ் மூலமாக புகழ்பெற்ற நடிகர் நீரஜ் மாதவ் இணைந்துள்ளார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் அறிமுகமாகும் படமாக வெந்து தணிந்தது காடு அமைந்துள்ளது. இந்த படத்தில் ஸ்ரீதரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் கவனத்தைக் குவித்துள்ளது.

”எனக்கு பேய் புடிச்சிருக்கு”.. 'இடியட்' படத்தில் மிரட்டும் நிக்கி கல்ராணி.. தெறி வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Simbu VTK movie actor neerav madhav latest poster viral

People looking for online information on A R Rahman, Gautham Vasudev Menon, Neerav Madhav, SilambarasanTR, Vendhu Thanindhathu Kaadu, VTK will find this news story useful.