Annatha Others ua
Jai been others
www.garudabazaar.com

“அதிர்ச்சியா இருக்கு..எப்படி இவங்க இத பண்ணலாம்?” கொந்தளித்த கெளதம் மேனன்! - வைரலாகும் டிவீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அன்புச்செல்வன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியீடு செய்யப்பட்டது.

I will not act in this film says Gautham Vasudev Menon

கௌதம் மேனன் நடிப்பதாக கூறி ’அன்புச்செல்வன்’ படத்தின் முதல் போஸ்டர் இன்று (நவம்பர் 3ஆம் தேதி) காலை வெளியிடப்படுவதாக அறிவிப்பு வந்தது. இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் நடிகர் விஷ்ணுவிஷால் வெளியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. 

I will not act in this film says Gautham Vasudev Menon

இந்த ’முதல் போஸ்டரில்’, கெளதம் மேனன் ஒரு துப்பாக்கியை பலவிதமாக கையாள்வது போல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் வெளியானவுடன், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இயக்குனர் கௌதம் மேனன் "இந்த செய்தி எனக்கு மிக அதிர்ச்சியாக இருக்கிறது, இந்த படத்தில் நான் நடிப்பதாக கூறப்படுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் படத்தின் இயக்குனரை நான் சந்தித்தது கூட கிடையாது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள், திரைபிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி இப்படி டிவீட் செய்துள்ளது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது,” என டிவிட்டரில் கூறியுள்ளார்.

I will not act in this film says Gautham Vasudev Menon

இந்தப் படத்தை செவன்ட்டி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வினோத் குமார் என்பவர் இயக்குகிறார். கௌதம் மேனன் இயக்கிய 'காக்க காக்க' படத்தில் சூர்யாவின் கதாபாத்திரப் பெயர் 'அன்புச்செல்வன்' என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கௌதம் மேனன் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும்  விடுதலை படத்தில் மிக முக்கிய போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

I will not act in this film says Gautham Vasudev Menon

People looking for online information on Anbu Selvan, Gautham Vasudev Menon will find this news story useful.