RRR Others USA
www.garudabazaar.com

”எனக்கு பேய் புடிச்சிருக்கு”.. 'இடியட்' படத்தில் மிரட்டும் நிக்கி கல்ராணி.. தெறி வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள இடியட் படத்தின் புதிய ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nikki galrani shiva idiot movie new funride promo

ரீல் டூ ரியல் ஜோடி.. 2 வருஷ 'லவ்'.. ஆதி - நிக்கி பகிர்ந்த வைரல் 'Engagement' ஃபோட்டோ..

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வெளிவரவிருக்கும் திரைப்படம் இடியட். இத்திரைப்படத்தில் இவர்களுடன் கிங்ஸ்லீ மயில்சாமி, ஊர்வசி, ஆனந்த்ராஜ், ரவிமரியா, மயில்சாமி, சிங்கமுத்து, அக்சரா கவுடா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் மூலம் இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

பேயைக் கலாய்க்கும் ட்ரண்ட்..

கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான படம் தில்லுக்கு துட்டு. இதை லொள்ளு சபா புகழ் இயக்குனர் ராம்பாலா இயக்கி இருந்தார். ஹாரர் காமெடி என்ற ஜானரில் பேயையே  கலாய்க்க கூடிய வித்தியாசமான படமாக அமைந்த இந்த படம் வெற்றி பெற்றது.  இப்படத்தைத் தொடர்ந்து சந்தானம் ராம்பாலா கூட்டணியில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான  தில்லுக்கு துட்டு 2 உருவாகி, அந்த படமும் பெரும் வெற்றி பெற்றது.

Nikki galrani shiva idiot movie new funride promo

மீண்டும் பேய்க்காமெடி

தில்லுக்கு துட்டு 2 வெற்றுக்குப் பிறகு ராம் பாலா தற்போது மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி மற்றும் பலரது நடிப்பில் ‘இடியட்’ என்கிற முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமொன்றை இயக்குநர் ராம் பாலா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படமும் ராம்பாலாவின் முந்தைய படங்களான ஹாரர்-காமெடி வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Nikki galrani shiva idiot movie new funride promo

கலக்கலான ப்ரோமோ…

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் நிக்கி கல்ராணி, மயில் சாமி, சிவா மற்றும் கிங்ஸ்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் நிக்கி கல்ராணிக்கு பேய் ஓட்டுவது போலவும், அவரே எனக்கு பேய் பிடிச்சுருக்கு என கூறுவது போலவும் ஜாலியான ப்ரோமோவாக வெளியாக இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஆதி நிக்கி கல்ராணி நிச்சயதார்த்தம்….

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.

Nikki galrani shiva idiot movie new funride promo

இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களை, இருவரும்  தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். கடந்த 24 ஆம் தேதி, தங்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்ததாகதாகவும், அதில் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பீஸ்ட் வெறித்தனம் overloaded… வெளியானது 5 மொழிகளின் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Nikki galrani shiva idiot movie new funride promo

People looking for online information on Anand Raj, Mayilsamy, Mirchi Shiva, Nikki Galrani, Ram Bala, Redin Kingsley, Shiva, Urvashi will find this news story useful.