www.garudabazaar.com

Mass Pacca Mass: சிம்பு - கௌதம் மேனன் இணையும் வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டுள்ளது.

Exciting News is Here Vendhu Thanindhathu Kaadu movie update

இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் ஆரம்பமானது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தபின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 26 அன்று ஆரம்பமானது. இதற்கிடையில் இந்த படத்தின் முதல் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகி அனைவரது புருவத்தையும் உயர்த்தின.

Exciting News is Here Vendhu Thanindhathu Kaadu movie update

இந்நிலையில் படத்தின் தயாரிப்பு தரப்பு புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது. அதில் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு சிம்பு கடினமாக உழைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Exciting News is Here Vendhu Thanindhathu Kaadu movie update

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Exciting News is Here Vendhu Thanindhathu Kaadu movie update

People looking for online information on Gautham Vasudev Menon, Silambarasan TR will find this news story useful.