RRR Others USA
www.garudabazaar.com

"இனி நீங்க மகாராஜமௌலி" வாவ்.. RRR பாத்துட்டு இயக்குநர் ஷங்கர் போட்ட செம பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் ஆர் ஆர் ஆர் திரைப்படம் பார்த்து பகிர்ந்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director shankar applauded maha rajamouli after watching RRR

அட பிரியா பவானி சங்கரா இது? ஜொலிக்கும் மாடர்ன் உடையில் வைரல் Pic!

ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் ரிலிஸாகி ரசிகர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து பலரும் அந்த படத்தைப் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னணிக் கலைஞர்களின் மூன்றாண்டு உழைப்பு..

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கும் RRR படத்தை இயக்குனர் ராஜமௌலி பாகுபலி வெற்றிக்குப் பின் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொண்டார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் ஏற்று செயல்படுத்தினார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முன்பே ரிலீஸ் ஆக வேண்டிய RRR உலகம் முழுவதும் ரிலீஸ் நேற்று ஆகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று வருட உருவாக்கத்துக்குப் பிறகு இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

Director shankar applauded maha rajamouli after watching RRR

பிரம்மாண்ட ரிலீஸ்

RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.  இந்த படத்துக்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. படத்தின் ரன்னிங் டைம்  3 மணி நேரம் 5 நிமிடங்கள். RRR படம்  நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரிலீஸுக்குப் பின்னர் ரசிகர்களிடம் இருந்து ஏகோபித்த வரவேற்பு இந்த படத்துக்கு கிடைத்து வருகிறது.

Director shankar applauded maha rajamouli after watching RRR

படத்தைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்…

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் ஆர் ஆர் ஆர் படம் பார்த்து தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். அவரின் டிவிட்டர் பக்கத்தில் ‘ R avishing (கவர்ந்திழுக்கும்), R iveting (ஆழமாக உள்செல்லும்), R obust (வலுவான)…காலம் முழுவதும் எதிரொலிக்க போகும் கர்ஜனை. இணையில்லாத அனுபவத்தை அளித்த மொத்த படக்குழுவுக்கும் நன்றி. ராம்சரணின் எழுச்சி மிக்க நடிப்பு மற்றும் திரைமொழி, இதயத்தை இழுக்கும் ஜூனியர் என் டி ஆரின் நடிப்பு. அசைக்க முடியாத உங்கள் கற்பனை. தலைவணங்குகிறேன் ’மகாராஜ’ மௌலி’ எனப் பாராட்டியுள்ளார். இந்த டிவீட் இப்போது வைரலாகி வருகிறது.

இறுகிய ABS வயிற்று தசையுடன் ராஷ்மிகா மந்தனா! என்னா பிட்னஸ்யா இது..! வைரல் புகைப்படம்

தொடர்புடைய இணைப்புகள்

Director shankar applauded maha rajamouli after watching RRR

People looking for online information on Director S Shankar, NTR, Ram Charan, RRR, S Shankar, SS Rajamouli will find this news story useful.