Breaking: விஜய்யின் ’தளபதி 64’ அட்டகாசமான First Look இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 31, 2019 04:37 PM
விஜய், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கும் 'தளபதி 64' ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அப்படத்தில் விஜய்யின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் இவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, விஜய் டிவி புகழ் தீனா, ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன், விஜே ரம்யா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து செக்கண்ட் லுக்கும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Tags : Vijay, Lokesh Kanagaraj, Anirudh