'சிம்புவுக்கு கல்யாணம் எப்போ?' - கண் கலங்கிய டி.ராஜேந்தர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டி.ராஜேந்தரின் மகனும், நடிகர் சிம்புவின் சகோதரருமான குறளரசனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பை நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

T.Rajendar emotional speech about his son Kuralarasan and Simbu

இந்நிலையில் டி.ராஜே ந்தர்  ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பேசிய அவர், திருமண வரவேற்புக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் சிலரை அழைக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்தார்.

மேலும், 'என்னுடைய நீண்ட கால நண்பர், ரஜினிகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை திருமணத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக சந்தித்தேன். அதனை செய்தியாக வெளியிட்ட அத்தனை ஊடகங்களுக்கும் நன்றி.

இந்த டி.ராஜேந்தர் சினிமாவுல மட்டும் காதலை சப்போர்ட் செய்கிறவன் கிடையாது. எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கை உடையவன் நான். எல்லா அப்பா அம்மாவுமே அவர்களின் குழந்தைகளோடு நல்லதுக்காக தான் வாழ்கிறார்கள்  என்றார்.

பின்னர் சிம்புவுக்கு கல்யாணம் எப்பொழுது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அப்போது, 'கேள்வி கேட்பது உங்கள் கடமை. ஆனால் அதற்கு பதில் சொல்லாமல் போவது என்னுடைய சூழ்நிலை'. என்று கண் கலங்கியவாறே பதிலளித்தார்.

'சிம்புவுக்கு கல்யாணம் எப்போ?' - கண் கலங்கிய டி.ராஜேந்தர் வீடியோ