www.garudabazaar.com

"எதிரிகளை மிதிச்சு ஏறிவந்தவன்".. மணல் மாஃபியாவாக சிம்பு.. அனல் பறக்கும் 'பத்து தல' டீஸர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Silambarasan TR Pathu Thala Movie Teaser Released

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஜெயம் ரவி நடிப்பில் 'தனி ஒருவன் - 2' எப்போ? அனல் பறக்கும் அப்டேட் கொடுத்த இயக்குனர்!

சிலம்பரசன்

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

பத்து தல படக்குழு

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Silambarasan TR Pathu Thala Movie Teaser Released

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

படப்பிடிப்பு ஊர்கள்

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

Silambarasan TR Pathu Thala Movie Teaser Released

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்ம சத்தம்

பத்து தல படத்தின் முதல் சிங்கிளான "நம்ம சத்தம்" என்ற பாடல், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியன்று சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

Silambarasan TR Pathu Thala Movie Teaser Released

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, பத்து தல படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த வண்ணம் இருந்தனர்.

பத்து தல டீஸர்

இந்நிலையில் பத்து தல படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியை களமாக கொண்டு டீஸர் அமைந்துள்ளது. AGR எனும் மணல் மாஃபியாவாக சிம்பு நடித்துள்ளார். கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், மனுஷ்ய புத்திரன் ஆகியோர் டீஸரில் இடம்பெற்றுள்ளனர்.

Silambarasan TR Pathu Thala Movie Teaser Released

Images are subject to © copyright to their respective owners.

"நான் படியேறி மேல வந்தவன் இல்லை. எதிரிகளை மிதிச்சு ஏறி மேல வந்தவன்". "என்னால எத்தன பேரு செத்தான்னும் தெரியாது, என்னால எத்தன பேரு வாழ்ந்தான்னு தெரியாது". போன்ற பஞ்ச் டயலாக் டீஸர் வீடியோவில் அமைந்துள்ளன.

Also Read | பூஜா ஹெக்டேயின் வெறித்தனமான பாக்ஸிங் பயிற்சி.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Pathu Thala Movie Teaser Released

People looking for online information on Pathu Thala, Pathu Thala Movie Teaser, Silambarasan TR, Simbu will find this news story useful.