www.garudabazaar.com

ஜெயம் ரவி நடிப்பில் 'தனி ஒருவன் - 2' எப்போ? அனல் பறக்கும் அப்டேட் கொடுத்த இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.

Director Mohan Raja Talks About Thani Oruvan 2

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விடுதலை - 1 படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா.. எப்போ? வெற்றிமாறன் கொடுத்த  அப்டேட்!

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அகிலன்

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மார்ச் 10, 2023 அன்று  வெளியாகிறது.

Director Mohan Raja Talks About Thani Oruvan 2

Images are subject to © copyright to their respective owners.

தனி ஒருவன்

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்து மோகன் ராஜா பதில் அளித்துள்ளார்.

2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் ஜெயம் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் தனி ஒருவன். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்தார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

Director Mohan Raja Talks About Thani Oruvan 2

Images are subject to © copyright to their respective owners.

தனி ஒருவன் - 2

தனி ஒருவன் படத்தை தொடர்ந்து இந்த தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இயக்குனர் மோகன்ராஜா, சொப்பன சுந்தரி படத்தின் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், "தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போ?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மோகன் ராஜா, "கண்டிப்பா இருக்கு. இந்த வருஷம் இல்லை. அடுத்த வருஷத்துல கண்டிப்பா இருக்கு." என பதில் அளித்தார்.

Director Mohan Raja Talks About Thani Oruvan 2

Images are subject to © copyright to their respective owners.

மோகன் ராஜா

இயக்குனர் மோகன் ராஜா, சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் படத்தை இயக்கி இருந்தார். ஜெயம், எம். குமரன் S/O மகாலெட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தில்லாலங்கடி, வேலாயுதம், வேலைக்காரன் ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார்.

Also Read | பூஜா ஹெக்டேயின் வெறித்தனமான பாக்ஸிங் பயிற்சி.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் போட்டோஸ்

ஜெயம் ரவி நடிப்பில் 'தனி ஒருவன் - 2' எப்போ? அனல் பறக்கும் அப்டேட் கொடுத்த இயக்குனர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director Mohan Raja Talks About Thani Oruvan 2

People looking for online information on Jayam Ravi, Mohan Raja, Thani Oruvan 2 will find this news story useful.