www.garudabazaar.com

யோகிபாபுவின் புதிய படம்!!.. 3 மாநிலங்களில் வெளியிட லைகாவுடன் இணையும் பிரபல நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

11:11 Productions தயாரிப்பாளர்  Dr.பிரபு திலக், Lyca Productions தயாரிப்பாளர் சுபாஸ்கரனுடன் இணைந்து, யோகி பாபு நடிப்பில் ஆவிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள காமெடி படமான “பன்னிக்குட்டி” படத்தினை தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகின்றார்.

yogi babu Starrer Panni Kutty TN Kerala Karnataka release

11:11 Productions  நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் இது குறித்து கூறும்போது, “எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 Productions  “பன்னிக்குட்டி” படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, Lyca Productions உடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம்.

11:11 Productions எப்போதும் திரை ரசிகர்கள் இதயம் கனிந்து ரசித்து மகிழும் திரைப்படத்தை வழங்கி வருதில் மிகுந்த பெருமை கொள்கிறது. அந்த வரிசையில் பன்னி குட்டி திரைப்படமும் ரசிகர்களுக்கு  ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.

“பன்னிக்குட்டி” திரைப்படத்தை  அனுசரண் இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவைத் தவிர்த்து, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள்  இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையையும் எழுதியுள்ளார். சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

yogi babu Starrer Panni Kutty TN Kerala Karnataka release

People looking for online information on 1111 Productions, 1111 Productions associates with Lyca Productions for the release of Yogi Babu Starrer “Panni Kutty” in Tamil Nadu, 1111 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது, Anusaran, பன்னிக்குட்டி, யோகி பாபு, யோகிபாபு, யோகிபாபு பன்னிக்குட்டி படம், Karnataka Kerala, Lyca Productions, Yca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை, Yogi Babu will find this news story useful.