Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

வெளிநாட்டுக்கு சென்ற நடிகை பிரியா பவானி சங்கர்.. அதுவும் இந்த நாட்டுக்கா? ஆஹா! செம்ம PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

Priya Bhavani Shankar Visit Muscat Oman Viral Photos

Also Read | பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது'.. வெளியான கலர்ஃபுல்லான முதல் சிங்கிள் பாடல்!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். சமீபத்தில் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார்.

Priya Bhavani Shankar Visit Muscat Oman Viral Photos

கடைசியாக  யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்திலும், குருதி ஆட்டம் படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் சோனி லிவ் தளத்தில் வெளியான விக்டிம் ஆந்தாலஜியில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

Priya Bhavani Shankar Visit Muscat Oman Viral Photos

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். 

பிரியா பவானி சங்கர் நேற்று புதிய போட்டோ ஷூட் நடத்தி புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். Modern லுக்கில் சிவப்பு நிற உடையில் பிரியா பவானி சங்கர் காட்சியளிக்கிறார்.‌ இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராஃபர் அருண் பிரசாத் எடுத்துள்ளார்.

Priya Bhavani Shankar Visit Muscat Oman Viral Photos

இந்நிலையில் இன்று நடிகை பிரியா பவானி சங்கர் விமானம் மூலம் ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை மஸ்கட்டில் இருந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Priya Bhavani Shankar Visit Muscat Oman Viral Photos

 

Also Read | "லால்சிங் சத்தா" படத்தை பார்த்த பிரபல தமிழ் இயக்குனரின் உருக்கமான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Visit Muscat Oman Viral Photos

People looking for online information on Priya Bhavani Shankar, Priya Bhavani Shankar Visit Muscat Oman will find this news story useful.