www.garudabazaar.com

bigg boss : "மல்லிப்பூ" பாட்டுக்கு டான்ஸ் ஆடிய குயின்ஸி .. மாஸ் காட்டிய ஜனனி.. 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகள் மற்றும் நிகழ்வுகளால் சென்று கொண்டிருக்கிறது.

janani and queency dance in biggboss tamil mallipoo song

எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு சண்டைகள் அல்லது பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும்.

இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர். முன்னதாக, முதல் இரண்டு வாரம் பிக்பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, தனது மகன் மற்றும் குடும்பத்தினரை பிரிந்து இருக்க முடியாது என கூறி சுய விருப்பத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சாந்தியும் எலிமினேட் செய்யப்பட கடைசி வாரத்தில் அசல் கோலாரும் எலிமினேட்  செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து டாஸ்க்குகள் உள்ளிட்டவற்றால் பல்வேறு திருப்புமுனைகள் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

janani and queency dance in biggboss tamil mallipoo song

இந்த நிலையில், BB Talent Show என்ற பெயரில் இரு அணிகளாக பிரிந்து பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், நடனம்,பாடல் உள்ளிட்ட தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விஷயங்களை இந்த BB Talent ஷோவில் முயற்சிக்க வேண்டும்.

janani and queency dance in biggboss tamil mallipoo song

மேலும் இந்த நிகழ்ச்சியில் மைனா நந்தினி மற்றும் மணிகண்டன் ஆகியோர் இணைந்து ஆடி இருந்த விஷயம், சக போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்திருந்தது. அதே போல, குயின்சி மற்றும் ஜனனி ஆகியோர் முறையே 'மல்லிப்பூ' மற்றும் 'நன்னாரே நன்னாரே' பாடலுக்கு நடனமாடிய வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

janani and queency dance in biggboss tamil mallipoo song

கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்திருந்த வெந்து தணிந்த காடு திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி இருந்த மல்லிப்பூ பாடல் இடம்பெற்றிருந்தது. வேற லெவலில் ட்ரெண்ட் ஆகி சக்கை போடு போட்டு வரும் இந்த பாடலுக்கு தான் குயின்சி அசத்தலாக நடனமாடி இருந்தார். அவருடன் விக்ரமன் மற்றும் மணிகண்டன் நடுவில் இணைந்து ஆடியதும் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டிருந்தது.

அதே போல, நன்னாரே பாடலுக்கும் நிஜ பாடலில் வரும் சில நடன அசைவுகளை ஜனனி க்யூட்டாக ஆடி இருந்ததும் போட்டியாளர்கள் கைத்தட்டல்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

janani and queency dance in biggboss tamil mallipoo song

People looking for online information on BIGGBOSS TAMIL, Janani, Queency will find this news story useful.