www.garudabazaar.com
iTechUS

பிரபல நடிகரின் நிச்சயதார்த்தத்தில் வாழ்த்திய சித்தார்த் - அதிதி.. Viral ஃபோட்டோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Siddharth and Aditi rao hydari attend sharwanand engagement

Also Read | "நீங்க டைட்டில் வின்னர் இல்ல, Total Winner".. விக்ரமனுக்கு 'திருமாவளவன்' கொடுத்த பெயர்.. கூடவே கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு!!

தமிழில் எங்கேயும் எப்போதும், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, கணம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஷர்வானந்த். தெலுங்கில் பிரபலமான இவர், அங்கே ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் கணம் என்ற திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

Siddharth and Aditi rao hydari attend sharwanand engagement

இதனிடையே, ஷர்வானந்த் திருமணம் குறித்து சில தகவல்களும் அதிகம் வைரலாகி வந்தது. இந்த நிலையில், அவரது நிச்சயதார்த்தம் நேற்று (27.01.2023) நடந்து முடிந்தது. ரக்ஷிதா என்ற பெண்ணுடன் ஷர்வானந்த் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர் மறைந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த போஜ்ஜலா கோபால கிருஷ்ண ரெட்டியின் பேத்தி ஆவார். மேலும், ரக்ஷிதாவின் தந்தை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் உள்ளார் என தெரிகிறது.

Siddharth and Aditi rao hydari attend sharwanand engagement

இந்த நிலையில், ஷர்வானந்த் - ரக்ஷிதா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது. அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் வைத்து நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த ஜோடி மோதிரம் மாற்றிக் கொண்டது.

Siddharth and Aditi rao hydari attend sharwanand engagement

அதே போல ஏராளமான திரை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மெகாஸ்டார் சிரஞ்சீவி குடும்பம், நாகர்ஜுனா குடும்பம், ராம் சரண் என பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஷர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். அதே போல, சித்தார்த் மற்றும் அதிதி ஆகியோர் ஒன்றாக ஒரே போட்டோவில் போஸ் கொடுக்கவும் செய்திருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "அவரு ஒரு Victim, ஏன் அப்டி பேசுனாருன்னு".. வெளிய வந்த பின் அசிம் பத்தி பேசிய விக்ரமன்!!

தொடர்புடைய இணைப்புகள்

Siddharth and Aditi rao hydari attend sharwanand engagement

People looking for online information on Aditi Rao Hydari, Sharwanand, Sharwanand engagement, Siddharth will find this news story useful.