www.garudabazaar.com
iTechUS

"சகோதரிகள்".. மகளுடன் குஷ்பு இருக்கும் PHOTO-க்கு நடிகை அதிதி ராவ் & DD போட்ட வைரல் கமெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பு, தமது மூத்த மகளுடன் பகிர்ந்த  புகைப்படங்களுக்கு நடிகை டிடி & அதிதி ராவ் ஹைத்ரி பதிவிட்ட கமெண்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

DD Aditi Rao Hydari Comment on Khushbu Post

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனுஷ் குரலில் இளையராஜா இசையில்.. வெளியான விடுதலை படத்தின் முதல் சிங்கிள் பாடல்..!  

தமிழ் சினிமாவில் 85-90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு . தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர்.

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் குஷ்பு நடித்துள்ளார்.  பின் குணசித்திர வேடங்களில் குஷ்பு நடித்து வந்தார். அவ்வப்போது அவனி நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

DD Aditi Rao Hydari Comment on Khushbu Post

Images are subject to © copyright to their respective owners.

குஷ்பு நடித்த வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன், பிரம்மா, நடிகன், ரிக்‌ஷா மாமா, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். விஜய்யின் வாரிசு படத்திலும் குஷ்பு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

DD Aditi Rao Hydari Comment on Khushbu Post

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் சுந்தர்.சியை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கோண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு, சுந்தர் சி மூத்த மகளுடன் துபாயில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார்.

DD Aditi Rao Hydari Comment on Khushbu Post

Images are subject to © copyright to their respective owners.

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு நடிகை டிடி, "பார்க்கவே அழகாக உள்ளது. சந்தோஷமாக அனுபவியுங்கள்" என கமெண்ட் செய்துள்ளார். நடிகை அதிதி ராவ் ஹைத்ரி அந்த பதிவில், "சகோதரிகள்"  என கமெண்ட் செய்துள்ளார்.

Also Read | வா வா என் தேவதையே.. மகளுடன் ஆர்யா & சாயீஷா.. ரசிகர்களை கவரும் CUTE PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

DD Aditi Rao Hydari Comment on Khushbu Post

People looking for online information on Aditi Rao Hydari, DD, Dhivyadharshini, Khushbu Instagram Post, Kushboo Sundar will find this news story useful.