ஹார்மோன் ஊசி எடுத்தாரா ஹன்சிகா.? - ட்ரெண்ட் ஆகும் Love Shaadi Drama திருமண நிகழ்ச்சி.!
முகப்பு > சினிமா செய்திகள்டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியான நடிகை ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா திருமண நிகழ்ச்சி மிகச்சிறந்த தொடக்கத்துடன், நம்மை நிகழ்ச்சிக்குள் கவர்ந்து செல்கிறது.
ரசிகர்களை கொள்ளை கொண்ட ஒரு தேவதையின் திருமணமாக, உணர்வுப்பூர்வமான தருணங்கள், மனம் நெகிழும் காட்சிகள், சந்தோஷ கொண்டாட்டங்கள் மற்றும் பல மறக்க முடியாத நிகழ்வுகளுடன் ஹன்சிகா மோத்வானி - சோஹேல் கதுரியாவின் திருமணத்தில் நடந்தது.
இந்த பிரமாண்டமான திருமணம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இந்த திருமண விழா நிகழ்வை கண்டுகளிக்க ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் ‘ஹன்சிகாவின் லவ், ஷாதி, டிராமா’ நிகழ்வின் டிரெய்லரை முன்னதாக வெளியிட்டது. மேற்படி, இந்நிகழ்ச்சி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த கணம் முதல், திருமண திட்டமிடல்கள், திருமண வடிவமைப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமணத்தை நடத்திய விதங்கள் அனைத்தையும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் நிகழ்ச்சியான 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' காண்பிக்கும். ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் வெறும் ஆறு வாரங்களில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கு ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் இந்த திருமணத்திற்கு வந்த சிறு சிறு பரபரப்பு நொடிகள் அனைத்தையும் எப்படி சமாளித்தார்கள் என்பது பற்றி ஒரு முழு பார்வையைக் கொடுக்கும் என சொல்லப்பட்டது.
இதில் ஹன்சிகாவும் அவரது தாயும் தங்கள் கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியும், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முன்னெடுப்புகளை பற்றியும் முதல் எபிஸோட் பேசுகிறது. திருமணத்திற்கு முன்னதாக, ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் ஹன்சிகாவை மீட்டெடுக்க அவரது தாய் ஆறுதல் கூறுவதை முதல் எபிஸோடில் பார்க்கலாம். சோஹேல் உடைய கடந்த காலம் தொடர்பான செய்திகளால் ஹன்சிகா பாதிக்கப்பட்டுள்ளாரா? என்று ஹன்சிகாவின் தாயார், ஹன்சிகாவிடம் கேட்கும்போது, தனக்கு அப்படியொன்றும் பெரிதாக கவலைகள் இல்லை என்று ஹன்சிகா கூறுகிறார். முன்பு அந்த வருத்தம் இருந்ததாகவும், இப்போது அது தொந்தரவு செய்யவில்லை என்றும் கூறுகிறார்.
சிறு வயதிலயே ஹார்மோன் ஊசி எடுத்து கொண்டதாக வந்த செய்தி உங்களை வருத்தமடைய செய்ததா? என்று ஹன்சிகாவிடம் கேட்டதற்கு, “என்னால் சாதாரண ஊசிகளையே கூட எடுக்க முடியாது” என்று பதிலளிக்கிறார். மேலும் அவரது தாயார் இது பற்றி கூறுகையில் “நாங்கள் பஞ்சாபி மக்கள், எங்கள் குழந்தைகள் 12-16 வயதிலேயே பெரிதாக வளர்ந்து விடுவார்கள்” என்று கூறுகிறார்.
இப்படி எபிசோட் அடுத்த கட்டத்தை எட்டும் போது, மணமகனும், மணமகளும் சேர்ந்து ஜெய்ப்பூருக்கு வந்து திருமணத்திற்குத் தயாராவதை அதில் காணலாம். போலோ போட்டிக்குப் பிறகு, தனது மெஹந்தி நாளில் டெர்பி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற ஆசை ஹன்சிகாவிற்கு வருகிறது. இது வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றினாலும், அவரது தாயும், திருமணத்தை திட்டமிடுபவரும் அவருடன் நெடுநேரம் இதை பற்றி விவாதிப்பதையும் அதில் காணலாம். தனது திருமணத்தில் டெர்பியை நடத்த வேண்டும் என்ற ஹன்சிகாவின் இயல்பிற்கு மாறான கோரிக்கைகள் நிறைவேறுமா? என்பதெல்லாம் அடுத்த எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஹன்சிகாவின் லவ், ஷாதி, டிராமா டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக தற்போது ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஹன்சிகாவுடைய பிரம்மாண்ட திருமணத்தைப் பற்றிய சுவாரஸ்யங்களை கூறும் ஹன்சிகாவின் லவ், ஷாதி, டிராமா எபிசோட்களை தொடர்ந்து இதில் காணலாம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Hansika Motwani About Her Nick Name From Husband Sohail
- Hansika Motwani Byte After Marriage நடிகை ஹன்சிகா
- Actress Hansika Wedding Video Will Be Exclusively Streamed In Disney Plus HS
- Hansika Motwani Festival Pic With Husband Pongal 2023
- Hansika Motwani Sohael Khaturiya At Budapest Hungary
- Hansika Motwani Shares Pictures Of Her Marriage Goes Viral
- Actress Hansika Motwani Photo Shoot With Her Husband
- Hansika Motwani Cooked Her Post Wedding Pehli Rasoi
- Hansika Motwani Shares Her Marriage Picture In Insta
- Hansika Motwani Got Married In Jaipur Viral Pics
- Hansika Motwani Dancing With Sohael Khaturiya In Wedding
- Actress Hansika Motwani Pre Wedding Function Video