www.garudabazaar.com
iTechUS

“Marriage ஆன பின்பு இது ஒன்னுதான் difference” - நடிகை ஹன்சிகா ஜாலி பதில்.! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. 2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார்.

Hansika Motwani byte after marriage நடிகை ஹன்சிகா

Also Read | "சரவணன் நீங்க மாட்டிகிட்டீங்க..".. பரட்டை & சித்தப்பு கேரக்டர் பத்தி ரஜினி அடித்த கமெண்ட்..

மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா  மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை , 2022-ஆம் ஆண்டு, டிசம்பர் மாத தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் திருமணத்துக்கு பின்பாக பத்திரிகையாளர்களிடையே தோன்றிய ஹன்சிகாவிடம், திருமண வாழ்க்கை எப்படி போகிறது என கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் அளித்த ஹன்சிகா, “நல்லா இருக்குங்க.. திருமண வாழ்க்கையில் எந்த கான்சிக்வன்ஸஸூம் இல்லை. ஜெனரேஷன் மாறிவிட்டது, அனைவரும் சமம் என்கிற புரிதல் அனைவருக்குமே வந்துவிட்டது. நான் எப்போதும் போல ஷூட்டிங் வந்துவிட்டேன். சென்னையில் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிவிட்டன.

there is no consequences after marriage, im going to act again Says Hansika Motwani video

இந்த வருடம் 7 திரைப் படங்கள் இருக்கின்றன.” என குறிப்பிட்டார். மேலும் திருமண வாழ்க்கைக்கு பிறகான ஹன்சிகாவுக்கும் திருமண வாழ்க்கைக்கு முன்பான ஹன்சிகாவுக்கும் என்ன வித்தியாசம் என கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஹன்சிகா, “இது மட்டும்தான்.. கைல ரிங் இருக்கு பாருங்க” என தன் திருமண மோதிரத்தை சிரித்தபடி காண்பித்தார். இப்படி துருதுருவென தன் இயல்பு மாறாமல், அதே எனர்ஜியுடன் பேட்டி அளித்த ஹன்சிகாவை பலரும் வாழ்த்தினர்.

Also Read | 500 படங்கள் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம்..! சோகத்தில் ஆழ்ந்த கன்னட திரையுலகம் | Mandeep Rai

“MARRIAGE ஆன பின்பு இது ஒன்னுதான் DIFFERENCE” - நடிகை ஹன்சிகா ஜாலி பதில்.! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Hansika Motwani byte after marriage நடிகை ஹன்சிகா

People looking for online information on Hansika Motwani will find this news story useful.