கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக திறமையினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகிறார். சூர்யா ஜோடியாக தமிழில் 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய், அஜித், தனுஷ், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பிஸியாக இயங்கிவரும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை எட்டியுள்ளது.
இதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் 'எல்கேஜி' படத்துக்காக லியோன் ஜேம்ஸ் இசையில் டப்பாவ கிழிச்சான் என்ற பாடலை பாடியிருந்தார்.