www.garudabazaar.com

"நீதான் என் உலகம், சூரியன் எல்லாம்".. காதலர் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஸ்ருதிஹாசன் காதலர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Shruti Hassan Post about Santanu Hazarika on valentines day

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரெட்டை ஜடையில் ஸ்கூல் பொண்ணாக மாளவிகா மோகனன்.. வைரலாகும் கிறிஸ்டி படத்தின் நியூ லுக்!

சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முதன்மையானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வாடிக்கையாக கொண்டவர்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக 'லாபம்' திரைப்படம் தமிழில் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்'  படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.

Shruti Hassan Post about Santanu Hazarika on valentines day

Images are subject to © copyright to their respective owners.

கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்கள்.

Shruti Hassan Post about Santanu Hazarika on valentines day

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில்  பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளியான  வீர சிம்மா ரெட்டி படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். நடிகர் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின.

Shruti Hassan Post about Santanu Hazarika on valentines day

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் சாந்தனு ஹசாரிகா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், "நீங்கள் சிறந்தவர். என்னுடைய இதயம் உங்களிடம் உள்ளது. என் சிந்தனையும் நீங்கள் தான். என் சூரியனும் நீங்கள் தான். இந்த உலகில் அதிர்ஷ்டசாலி பெண் நான் தான்" என ஸ்ருதிஹாசன் பதிவிட்டுள்ளார்.

Shruti Hassan Post about Santanu Hazarika on valentines day

Images are subject to © copyright to their respective owners.

இந்த பதிவில் பின்னூட்டம் செய்த சாந்தனு, "என்னுடைய காதலே.. நீ தான் என் உலகம், நீ தான் என் சூரியன்,  நீ தான் என் கடல். நீ அதிச் சிறந்த பெண்" என கூறியுள்ளார்.

Also Read | LEO படத்தின் காஷ்மீர் ஷூட்டிங்.. காதலர் தினத்தில் த்ரிஷா பகிர்ந்த சூப்பர் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Shruti Hassan Post about Santanu Hazarika on valentines day

People looking for online information on Santanu Hazarika, Shruti Haasan, Shruti Hassan valentines day post will find this news story useful.