www.garudabazaar.com

மேஜிக் செய்த கமல் மேடையில் தோன்றிய ஸ்ருதி.. அவரே வெளியிட்ட Throwback வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் கமல், களத்தூர் கண்ணம்மா முதல் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரையில் பல படங்களில் நடித்துள்ளார்.

kamal introduced Shruti Haasan stage performance video

Also Read | முதல்முறையாக வீடியோவில் நடிகை ப்ரணிதாவின் குழந்தை.. கொஞ்சி மகிழ்ந்த CUTE வீடியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

kamal introduced Shruti Haasan stage performance video

கமலின் மகள் ஸ்ருதிஹாசன் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் துணிச்சலான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நடிப்பவர். தற்போது ஸ்ருதிஹாசன் தன்னை தமது தந்தை கமல்ஹாசன் ஒரு மேடையில் ஒரு மேஜிக் மேன் போல் தோன்றி அறிமுகப்படுத்தியதையும், பின்னர் அந்த மேடையில் தான் பாடியதையும் குறித்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

kamal introduced Shruti Haasan stage performance video

இது மறக்க முடியாத நினைவுகள் என்று குறிப்பிட்ட ஸ்ருதிஹாசன் அது தமது அப்பா, அம்மா முன்னிலையில் தனக்கு கிடைத்த தனது முதல் மேடை Performance என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் ஸ்ருதியை அறிமுகப்படுத்திவிட்டு கமல் சென்ற பிறகு பார்வையாளர்களிடம் பேசிய ஸ்ருதி, “நான் பாடுறது நல்லா இருந்தா கை தட்டுங்க.. நல்லா இல்லனாலும் கைத்தட்டுங்க.. நான் சின்ன பொண்ணுல்ல? ”என க்யூட்டாக பேசுகிறார்.  இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

 

Also Read | புதிய படத்துல ஹீரோவாகும் மற்றுமொரு Bigg Boss பிரபலம்..? - இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்.!

தொடர்புடைய இணைப்புகள்

kamal introduced Shruti Haasan stage performance video

People looking for online information on Kamal Haasan, Shruti Haasan, Shruti Haasan first stage performance video will find this news story useful.