www.garudabazaar.com

LEO படத்தின் காஷ்மீர் ஷூட்டிங்.. காதலர் தினத்தில் த்ரிஷா பகிர்ந்த சூப்பர் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை த்ரிஷா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Trisha Krishnan shared Leo Movie Shooting Spot picture

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரெட்டை ஜடையில் ஸ்கூல் பொண்ணாக மாளவிகா மோகனன்.. வைரலாகும் கிறிஸ்டி படத்தின் நியூ லுக்!

நடிகர் விஜய் நடிப்பில்  'லியோ' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.S .லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

Trisha Krishnan shared Leo Movie Shooting Spot picture

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்ஸ்டார் அனிருத், லியோ படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Trisha Krishnan shared Leo Movie Shooting Spot picture

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இது தொடர்பான புகைப்படத்தை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் & த்ரிஷா வெளியிட்டிருந்தனர்.

Trisha Krishnan shared Leo Movie Shooting Spot picture

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். த்ரிஷாவின் ஸ்டைலிஸ்ட் மாலினி கார்த்திகேயன், ஹேர் ஸ்டைலிஸ்ட் ரோகிணி ஆகியோரும் இந்த புகைப்படங்களில் காட்சியளிக்கிறார்கள். பனி சூழ்ந்த இடத்தின் பின்னணியில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

Also Read | "இனிமேல் நான் சிங்கிள் இல்ல".. காதலியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்த காளிதாஸ் ஜெயராம்!

தொடர்புடைய இணைப்புகள்

Trisha Krishnan shared Leo Movie Shooting Spot picture

People looking for online information on Leo, Lokesh Kanagaraj, Trisha Krishnan, Trisha shared Leo Movie Shooting Spot, Vijay will find this news story useful.