www.garudabazaar.com
iTechUS

'KGF' பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்'.. ஸ்ருதிஹாசன் பகிர்ந்த ஷூட்டிங் ஸ்பாட் BTS! தெறி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்திய திரைப்படம் 'சலார்'.

Shruti Haasan and PrashanthNeel on the sets of Salaar

Images are subject to © copyright to their respective owners.

கே ஜி எஃப்' படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பிறகு அப்படத்தினை இயக்கிய  பிரசாந்த் நீல்,  'சலார்' படத்தை இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், 'கே ஜி எஃப்' பட புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வருகிறது 'சலார்' திரைப்படம்.

இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் இந்தியா முழுவதும்

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

'சலார்' திரைப்படம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முழு நீள ஆக்சன் படமான 'சலார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியானது. 'சலார்' திரைப்படம் - இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

Shruti Haasan and PrashanthNeel on the sets of Salaar

இந்த படத்தின் முதற் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒளிப்பதிவாளர் புவன கௌடா & பிரசாந்த் நீல் ஆகியோருடன் இருக்கும் BTS புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் "இரண்டு உன்னதமான ஆன்மாக்களோடு படப்பிடிப்பில் வேலை செய்வது ஆசிர்வதிக்கப்பட்டதாகும்"  என ஸ்ருதிஹாசன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Shruti Haasan and PrashanthNeel on the sets of Salaar

People looking for online information on Salaar, Shruthi Haasan will find this news story useful.