“டய்ட்ல இருக்கேன் அஜித் சார்...” - பிரபல ஹீரோயினுக்காக தல சமைத்த Tasty Dish என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் தன்னுடன் பணிபுரியும் படக்குழுவினருக்கு ஷூட்டிங் காலங்களில் சுவையான பிரியாணி சமைத்து கொடுத்ததாக பிரபலங்கள் பலரும் கூறியுள்ளனர். அந்த வகையில் டயட்டில் இருக்கும் பிரபல ஹீரோயினுக்காக பிரியாணிக்கு பதில் ரூசியான உணவு ஒன்றை சமைத்து கொடுத்திருக்கிறார்.

Shruti Haasan recalls Thala Ajith's cooking skills in talk show

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார், பைக், ஆளில்லா விமானம் இயக்கும் ஏரோ மாடலிங், ஃபோட்டோகிராபி, துப்பாக்கிச் சுடுதல் என பலவற்றிலும் ஆர்வம் கொண்ட அஜித்திற்கு சமையல் கலையிலும் ஆர்வம் உண்டு. நடிகர் அஜித் தான் நடிக்கும் திரைப்படங்களில் பணிபுரியும் படக்குழுவினருக்கு சுவையான உணவு சமைத்துக் கொடுப்பதை வழக்கமாக கொண்டவர் என அவரது உணவை ருசி பார்த்த பலரும் பேட்டிகளில் கூறியுள்ளனர்.

அப்படி கடந்த 2015ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘வேதாளம்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அவருக்கு பிடித்தமான உணவை சமைத்து கொடுத்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் நடிகை லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட ஸ்ருதிஹாசன் தனது திரை, இசை, மற்றும் சொந்த வாழ்க்கை குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது, அவருக்கு ஒரு டாஸ்க்காக சில புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன, அதன் நினைவுகளை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துக் கொண்டார். அதில் “‘வேதாளம்’ படத்தின் ஷூட்டிங்கின் போது, அஜித் சார் தன்னிடம் அனுமதி பெற்றுவிட்டு எடுத்த Black and White புகைப்படம் பற்றிய நினைவுகளை கூறினார். Black and White புகைப்படங்கள் எடுப்பதில் அஜித் சார் தி பெஸ்ட். என்னிடம் இருக்கும் நிறைய என்னுடையே பிடித்தமான புகைப்படங்களில் பெரும்பாலனவை அஜித் சார் எடுத்தது”.

“ஒரு முறை ‘வேதாளம்’ ஷூட்டிங்கில் படக்குழுவிற்கு அஜித் சார் தானே சமைத்த பிரியாணியை வழங்கினார். என்னிடம் கொடுத்த போது, நான் டயட்டில் இருப்பதால் பிரியாணி சாப்பிட மாட்டேன் சார் என கூறினேன்.. மீன் பிடிக்குமா என்று கேட்டார்.. பிடிக்கும் என்றதும், இதுவரை நான் எங்குமே சுவைத்திடாத அளவிற்கு மிக ருசியான மீன் ஒன்றை சமைத்து வாழை இலையில் வைத்து எனக்கு பரிமாரினார். சிறந்த மனிதர்” என ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.