டிஸ்னியின் ஃபேண்டஸி படத்தில் ஸ்ருதிஹாசன் - விவரம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 08, 2019 01:05 PM
வால்ட் டிஸ்னி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஃப்ரோஸன் 2’ திரைப்படத்தின் தமிழ் வெர்ஷனில் பிரபல தமிழ் நடிகை டப்பிங் செய்துள்ளார்.

டிஸ்னியின் ‘ஃப்ரோஸன்’ திரைப்படம் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. பனி பிரேதசத்தில் வசிக்கும் இளவரசிகளான அனா மற்றும் எல்சாவை பற்றிய ஃபேண்டஸி கதையான ஃப்ரோஸன் திரைப்படத்தை ஜெனிபர் லீ மற்றும் க்ரிஸ் பக் இணைந்து இயக்கினர்.
முதல் பாகத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஃபேண்டஸி திரைப்படமான இப்படம் வரும் நவ.22ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளது. ‘ஃப்ரோஸன் 2’ படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா மற்றும் பரிணித்தி சோப்ரா ஆகியோர் டப்பிங் பேசவுள்ளனர்.
தெலுங்கு மொழியில் நடிகை நித்யா மேனன், எல்சா கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசுகிறார். அவரைத் தொடர்ந்து தமிழில் எல்சா கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ருதிஹாசன் டப்பிங் செய்யவிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.