என்கூட நான் மட்டும் டைம் ஸ்பெண்ட் பண்ணறது பிடிச்சிருக்கு! ஸ்ருதி ஹாசன் வீடியோ பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ம்யூசிக் நோட்ஸ், பியானோ ப்ராக்டிஸ், குக்குங் க்ளீனிங் ஆர்கனைஸிங், எக்ஸர்ஸைஸ் என படு பஸியாக இந்த லாக்டவுன் பீரியட்டில் தன் மனதுக்குப் பிடித்தவற்றை செய்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதி ஹாசன் வீடியோ பேட்டி | Shruthi Hassan recent interview

கோலிவுட்டில் ஏற்பட்டுள்ள சிறிய இடைவெளியை மீறி தனது சோஷியல் மீடியா கணக்குகள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.  அண்மையில் Behindwoods-க்கு ஸ்ருதி அளித்த பிரத்யேக நேர்காணலில் பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார். ‘இந்த காலக்கட்டம் எல்லாருக்கும் கஷ்டம்தான். சில நாள் போர் அடிக்கும். ஆனா வேற வழி இல்லை. சில ஃபீல்ட்ல வீட்லேர்ந்து வொர்க் பண்ற ஆப்ஷன் இருக்கு, ஆனா ஆக்டர்ஸ்க்கு அது கிடையாது. கஷ்டம்தான் - ஷூட்டிங் போக முடியாம வீட்ல இருக்கறது. 

ஆனா இந்த சமயத்துல வேற வேலைகள் செய்யலாம். உங்களுக்கு எது சந்தோஷத்தை தருதோ அதை செய்யுங்க. பாசிட்டிவிட்டியை பரப்புங்க. சந்தோஷத்தை பரப்புங்க. இது நமக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கஷ்டமான சமயம். இந்த வைரஸ்கிட்டேர்ந்து கத்துக்க வேண்டியது இது எந்த பாகுபாடும் பாக்கறது இல்லை. எல்லாரையும் சமமா ட்ரீட் பண்ணுது. இந்த டைம்ல நாம எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்.’ என்று ஸ்ருதி கூறினார். மேலும் அவரது சுவாரஸ்யமான பதில்களுக்கு இந்த வீடியோவைப் பாருங்க

ஸ்ருதி ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் 'லாபம்'. இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார்.

Entertainment sub editor