நீச்சல் குளத்தில் கணவர், குழந்தையுடன் ஜாலி குளியல் போட்ட 'ஸ்ரேயா'.. வைரலாகும் Glamour ஃபோட்டோஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிளாமர் உடையில், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன், நீச்சல் குளத்தில் ஃபன் பண்ணும்  நடிகை  ஸ்ரேயாவின் புகைப்படங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Shriya saran new pic with hubby and child in pool viral

தெலுங்கு சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்த ஸ்ரேயா, 'எனக்கு 20, உனக்கு 18' என்னும் திரைப்படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

தமிழ், தெலுங்கு மொழிகள் மட்டுமில்லாமல், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் வரை பல திரைப்படங்களில் நடித்து மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் ஸ்ரேயா.

வேற லெவலில் பிரபலம்..

அதிலும் குறிப்பாக, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் என ஏராளமான முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, தன்னுடைய ஸ்டார்டமை தக்க வைத்துக் கொண்டார் ஸ்ரேயா. அதே போல, ஸ்ரேயாவின் நடனம் மற்றும் கவர்ச்சிக்கென்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

திருமணம் முடிஞ்சும் திரைப்படங்களில் பிசி..

இதனிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு, தனது நீண்ட நாள் காதலரான ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னரும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா, தற்போது ஸ்பெயினில் கணவருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஸ்ரேயா - ஆண்ட்ரே தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இது ஃபேமிலி டைம்..

இன்ஸ்டாக்ராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, தன்னுடைய திரைப்படம் மற்றும் விளம்பர படங்கள் குறித்த அப்டேட்களை பகிர்ந்து வருவதற்கு மத்தியில், கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் ஃபேமிலி புகைப்படங்களையும் அதிகம் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நீச்சல் குளம் ஒன்றில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நீரில் ஜாலி செய்யும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இந்த பதிவின் கீழ், தனது குடும்பத்தினருடன் அசத்தலாக நேரத்தினை கழிக்கும் ஸ்ரேயா குறித்து, பல்வேறு கருத்துக்களையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

நீச்சல் குளத்தில் கணவர், குழந்தையுடன் ஜாலி குளியல் போட்ட 'ஸ்ரேயா'.. வைரலாகும் GLAMOUR ஃபோட்டோஸ்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shriya saran new pic with hubby and child in pool viral

People looking for online information on Andrei Koscheev, Shriya Saran, Viral photo will find this news story useful.