RRR Others USA

வாவ்…. செம்ம fun ride இருக்கு போல… பீஸ்ட் unseen வைரல் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் புதிய புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் இணையத்தில் வெளியிட இப்போது அது வைரலாகப் பரவி வருகிறது.

Beast movie unseen vijay pooja hegde comic viral photo

பீஸ்ட் மோட் ஆன்….

நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் பீஸ்ட் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக ஐந்து மொழிகளில் பீஸ்ட் வெளியாக உள்ளது.

Beast movie unseen vijay pooja hegde comic viral photo

அரபிக்குத்து வைரல் ஹிட்…

இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளதால் படம் சம்மந்தமாக எந்த அப்டேட் வெளியானாலும் வைரல் ஹிட் ஆகி வருகின்றன. இதுவரை வெளியான அனைத்து போஸ்டர்களும் இணையத்தில் தீயாய் பரவின. அதுபோல படத்தில் இருந்து இதுவரை வெளியாகியுள்ள இரண்டு பாடல்கள் வைரல் ஹிட் ஆகியுள்ளன. முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடலை யுடியூபில் இந்த பாடலை 200 மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். அதையடுத்து வெளியான செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேன் இந்தியா ரிலீஸும் டிரைலர் அப்டேட்டும்…

பீஸ்ட் திரைப்படம் இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இது சம்மந்தமான ஐந்து மொழிப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து படத்தின் டிரைலர் நாளை (ஏப்ரல் 2) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Beast movie unseen vijay pooja hegde comic viral photo

லேட்டஸ்ட் புகைப்படம்

இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் படக்குழுவினர் அனைவரோடும் விஜய் ஒளிந்து நின்று எதையோ பார்ப்பது நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரோடு ‘உங்கள மாதிரியே நாங்களும் பீஸ்ட் டிரைலருக்காக காத்திருக்கோம் நண்பா’ எனக் கூறியுள்ளார். இதுவரை பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் சீரியஸ் மோடில் இருந்த நிலையில் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த போஸ்டரின் மூலம் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு உருவாகியுள்ளது.

Beast movie unseen vijay pooja hegde comic viral photo

தொடர்புடைய இணைப்புகள்

Beast movie unseen vijay pooja hegde comic viral photo

People looking for online information on Nelson, Pooha hegde, Sun pictures will find this news story useful.